காணும் பொங்கல் திருநாளை ஒட்டி திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி

காணும் பொங்கல் திருநாளை ஒட்டி திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இளைஞர்கள் இளம்பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதிக முறை இளவட்ட கல்லை தூக்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு;

Update: 2026-01-17 10:32 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் பொங்கல் வருடம் தோறும் நடத்தப்படும். அதில் கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, கோலப் போட்டி, இளவட்டக்கல் தூக்கும் போட்டி, ஆகியவை நடைபெறும். அதன்படி 14 ஆவது ஆண்டாக காணும் பொங்கல் திருவிழா நாளான இன்று இளவட்டக்கல் தூக்கும் போட்டி நெசவாளர் காலனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு விவசாய அணி துணை தலைவர் ஆர் டி எஸ் முருகையன் பகுதி நகர மன்ற உறுப்பினர் டபில்யூ டி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆண்கள் பிரிவில் 85 கிலோ எடை கொண்ட பெரிய கல்லும், பெண்களுக்கு 60 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல்லும், நடுத்தர வயதுடைய ஆண்கள் பெண்களுக்கு 45 கிலோ எடை உள்ள கல்லும், சிறுவர் சிறுமிகளுக்கு 33 கிலோ மற்றும் 20 கிலோ எடை கொண்ட கற்களும் என ஐந்து கற்கள் வைக்கப் பட்டிருந்தது. முதலில் ஊர்நல கமிட்டி தலைவர் சண்முகசுந்தரம் கற்களுக்கு பூசை செய்து வழிபாடு நடத்தினார். இளவட்ட நண்பர்கள் குழு தலைவர் பாஸ்கர்,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் போட்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனைதொடர்ந்து18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தது.தொடர்ந்து மாலை வரை நடக்கும் போட்டியில் அதிகப்படியான அளவு யார் இளவட்ட கல்லை தூக்குகிறார்களோ அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.

Similar News