புளியங்குடியில் ஒபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
புளியங்குடி ஒபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா;
புளியங்குடியில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த தின விழா இன்று நடந்தது. விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மூர்த்தி பாண்டியன், தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்வர்ணா, துரைப்பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவை தலைவர் கணபதி, நகர இளைஞர் அணி செயலாளர் காந்தன், ராம்ராஜ் ஹோட்டல் முருகன், உட்பட நகரக் கழக நிர்வாகிகள் வார்டு கழக நிர்வாகிகள் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.