டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளிகள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.;

Update: 2026-01-17 14:54 GMT
சேலம் மாவட்டம், ஆலச்சம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நந்தகுமார், 32.கூலி. இவர் தனது கிளாமர் டூவீலரில், தன் நண்பர்களான கூலித் தொழிலாளிகள் விஜயகுமார், ராஜா, ஆகிய இருவரை பின்னால் உட்கார வைத்துகொண்டு, இடைப்பாடி சாலையில் வந்து கொண்டிருந்தார். இவருக்கு எதிர் திசையில் வேகமாக வந்த போர்டு கார் ஓட்டுனர் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில், மூவரும் படுகாயமடைந்தனர். கார் ஓட்டுனர் நிற்காமல் சென்று விட்டார். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Similar News