சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. பரிசுகள் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. பரிசுகள் வழங்கினார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;
பெரம்பலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. பரிசுகள் வழங்கினார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கடந்த 12-ஆம் தேதி, பெண்களுக்கான கபடி,கோகோ,ஊசி கோர்த்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு, மேனாள் ஒன்றிய அமைச்சர் - கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திர்ன, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.ராமச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.இராஜ்குமார், தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்தார்த், ஜெயப்பிரியா மணிவாசகம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் மற்றும் ஜெயபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.