காங்கேயத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா;

Update: 2026-01-17 15:14 GMT
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த தினம் காங்கேயத்தில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காங்கேயம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக கட்சியின் காங்கேயம் நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலருமான எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக நகரப் பொருளாளர் சி.கந்தசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் ஏ.பி.துரைசாமி, கே.டி.அருண்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News