திருச்செங்கோடு சின்ன பாவடி தெருவில் நடந்த பொங்கல் விழாவில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அரசியல் பேசியபோதுதடுத்து நிறுத்திய விழா குழு தலைவர்பரபரப்பு
திருச்செங்கோடு சின்ன பாவடி தெருவில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அரசியல் பேசியபோது தடுத்து நிறுத்திய ஊர் கமிட்டி தலைவர் தனசேகர் பொங்கலைப் பற்றி மட்டும் பேசுங்கள் எனக் கூறியவுடன் பேச்சை நிறுத்திய அருண்ராஜ் இதனால் பரபரப்பு ஏற்பட்டது;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் திருச்செங்கோடு நகராட்சி 11-வது வார்டு சின்னப்பாவடி பகுதியில்சின்னப்பாவடி டெக்கரேஷன் கிளப் அங்கு மெமோரியல் கிரிக்கெட் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்க வந்தவர் மேடையில் விஜய் குறித்தும் வருங்கால தமிழக முதல்வர் எனவும் உங்களுக்கு விஜயை எவ்வளவு பிடிக்கும் எனவும் பொதுமக்களிடம் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்த போது சின்ன பாவடி பொங்கல் விழா குழு நிர்வாகி தனசேகர் என்பவர் குறிக்கிட்டு பொங்கல் விழாவிற்கு வந்தால் பொங்கல் பற்றி மட்டும் பேசுங்கள் வேறு எதுவும் அரசியல் பேசக்கூடாது அதற்கென்ன தனி மேடை போடுங்கள் பேசுங்கள் பொதுவான நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் உங்கள் கட்சி அரசியல் இங்கு பேச வேண்டாம் எனக் கூறியதும் பேச்சை பாதியில் நிறுத்திய அருண்ராஜ் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் எனக்கூறி பேச்சை முடித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுக்கடை விற்பனை வளர்ச்சி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாக இருக்கிறது அதில் தான் திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது என குறிப்பிட்டு இருக்கிறீர்களே நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை அகற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவீர்களா என கேட்டபோது மதுக்கடைகள் இருக்கலாம் தவறில்லை விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் ஒரு அரசு செயல்படுவது தான் தவறு என சுட்டிக் காட்டுகிறோம் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என கூறிய திமுக அதை செய்ததா என கேட்டார் தொடர்ந்து ஜனநாயகம் பட விவகாரம் குறித்தும் தூத்துக்குடி அஜிதா பிரச்சினை குறித்தும் விஜய்எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறாரே என கேட்டபோது பதில் சொல்வதை தவிர்த்து பேட்டியை முடித்துக் கொண்டு சென்றார். பொது மேடையில் அருண் ராஜை அரசியல் பேசக்கூடாது என தடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.