ஹோம் கேர் என்கிற புதிய சேவை அறிமுக விழா
புதுக்கோட்டை பி வெல் மருத்துவமனையில் ஹோம் கேர் என்கிற புதிய சேவை அறிமுக விழா நடைபெற்றது.;
புதுக்கோட்டை பி வெல் மருத்துவமனையில் ஹோம் கேர் என்கிற புதிய சேவை அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மூத்த அறுவைசிகிச்சை மருத்துவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். பி வெல் மருத்துவமனை மருத்துவர் ஸ்வேதா வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு ஹோம் கேர் சேவையானது இந்தியாவில் பிரபலம் அடைந்து வருகின்றன. இச்சேவையில் முதியோர் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் வசதியாக இருப்பதே இதற்கு காரணம் என்று இந்த சேவையை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார் இவ்விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் ராமதாஸ், டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் சலீம், வர்த்தக கழகத் தலைவர் சாகுல் ஹமீது, பேக்கரி மஹராஜ் உரிமையாளர் சீனு அருண் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் ரோட்டரி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மருத்துவமனை மேலாளர் சந்திரா நன்றியுரை வழங்கினார்.