திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலச்சி பாளையத்தில் தவெகஅலுவலகம் திறப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையத்தில் த.வெ.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது குமாரமங்கலம் பிரிவு சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தை, த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் திறந்து வைத்தார்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையத்தில் த.வெ.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரமங்கலம் பிரிவு சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தை, த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தந்த அருண்ராஜுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய த.வெ.க. நிர்வாகிகளை சந்தித்து அருண்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், நிர்வாகிகள் வேகத்துடன் களப்பணியை தொடங்க வேண்டும் எனவும், மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்து சரி செய்து கொடுப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.