முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த நாள் விழா.
ஆரணி, சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தி பிறந்தநாள் விழா முன்னிடடு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.;
ஆரணி, சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தி பிறந்தநாள் விழா முன்னிடடு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர். முன்னாள் மத்திய அமைச்சரரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின் 86 வதுபிறந்தநாள் விழா சேத்து |ப்பட்டு- வந்தவாசி சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.முனிரத்தினம் தலைமை தாங்கி வாழப்பாடி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு. வழங்கினார். இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஜி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் தவணி அண்ணாமலை வாழப்பாடியார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில்முன்னாள் நகர தலைவர்கள் ஜாபர்அலி, வடமலை, மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.