அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆயிபாளையம் கிராமத்தில், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், சமுதாயக் கூடம் அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..

அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆயிபாளையம் கிராமத்தில், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், சமுதாயக் கூடம் அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா;

Update: 2026-01-19 13:31 GMT
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆயிபாளையம் கிராமத்தில், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், சமுதாயக் கூடம் அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி (19.01.2026) நடைபெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் 2025-26-ன்கீழ், ரூ. 11.25 இலட்சம் மதிப்பீட்டில், சமுதாயக்கூடம் அமைப்பதற்காக பணிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 26 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார். மேலும், 500 மகளிருக்கு, QR குறியீடுடன் கூடிய, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார். 591 மகளிருக்கு பொங்கல் வாழ்த்து அட்டைகளும் அளிக்கப்பட்டன. அப்போது நிகழ்ச்சிகள் சிறப்புரையாற்றிப் பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார், தமிழகத்தில் மகளிர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடனுதவிகளை அதிக அளவில் மகளிர் குழுவினருக்கு வழங்கப்பட்டு உரிய காலத்தில் அவை திரும்ப பெறப்படுகின்றன. மகளிர் சுய உதவி குழு கடன் திட்டங்கள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவிலான சேமிப்பை மகளிர் பெற்று வருகின்றனர். இராசிபுரம் வட்டத்தில், 854 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். மகளிர் உரிமைத் தொகையை பொறுத்தவரை விடுபட்டவர்களுக்கு மீண்டும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், நாட்டிலேயே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டம், இதுபோன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில், அதிமுக ஆட்சியில் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மகளிர் சுய உதவி குழுவினருக்கு இன்று வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மூலம், பேருந்துகளில் தங்கள் பொருட்களை இலவசமாக எடுத்து செல்லலாம்., கோ ஆப் டெக்ஸ் விற்பனையங்களில் கழிவு வழங்கப்படும்., மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஆவின் பொருட்கள் கட்டண சலுகை, இதனை மகளிர் சுய உதவி குழுவினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கு. செல்வராசு, வெண்ணந்தூர் வட்டார ATMA குழுத் தலைவர் R.M. துரைசாமி, அத்தனூர் பேரூராட்சி தலைவர் R. சின்னசாமி, துணைத் தலைவர் க. கண்ணன், செயல் அலுவலர் R. விஜயன், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News