சிப்காட் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அடுத்த வளையப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும்,;
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்களை திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்ற கழகம், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் என 50-க்கும் மேற்பட்டோர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.