மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட அவைத்தலைவராக முருகேசன், மாவட்ட துணை செயலாளராக வீர பால்சேக், இளைஞர் அணி மாவட்ட செயலாளராக அப்பாஸ், தொண்டரணி மாவட்ட செயலாளராக காஜாமைதீன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளராக அப்பாஸ் ஆகியோர் தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.