ஆரணி கோட்டை மைதானத்தில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி.

ஆரணி கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2026-01-20 06:38 GMT
ஆரணி கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை தாங்கினார். அனைவரையும் சிவா நாடகமன்ற உரிமையாளர் அம்முசிவா வரவேற்றார். இதில் தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், கட்டைக்கூத்து, பரதநாட்டியம், சிலம்பாட்டம் ,தவில் நாதஸ்வரம் ,பம்பை கைச்சிலம்பு மற்றும் பைக் ஹெல்மெட் விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது. இதனை ஆரணி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் குரு, கண்ணன், நாடக கலைஞர் குமணன், திமுக சேர்ந்த துரைமாமது, விண்ணமங்கம் ரவி, கிராம நிர்வாக அலுவலர் முனியவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். .

Similar News