திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனஉயிரின சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், தேவதானப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வன சரகங்களில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இப்பணிகள் 6 நாட்கள் நடைபெறுவதாகவும் 200-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு பணியானது நடைபெறுகிறது மேலும் அனைத்து விலங்குகளின் கால்தடம், எச்சங்கள் கேமரா பதிவுகள் மூலம் பதிவு செய்வதாகவும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஆனைமலை புலிகள் காப்பக வன உயிரியலாளர் மூலம் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.