மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கபடி போட்டி தொடக்கம்
குமாரபாளையம் அருகே மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கபாடி போட்டியை ஒன்றிய பொறுப்பாளர் தொடங்கி வைத்தார்;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அருகே உள்ள பல்லக்காபாளையம் முனியப்பன் கோவில் பல்லவன் கபடி குழு நடத்தும் 17 ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி இன்று நடைபெற்றது. முதற்கட்டமாக பெண்களுக்கான போட்டியை பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். மேலும் பெண்களுக்கான முதல் பரிசு தொகை ரூ.20020- நிதி விழா குழுவினரிடம் வழங்கி சிறப்பித்தார்..... இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் திரு.S.N.சௌந்தரம் அவர்கள், கிளை இளைஞர் அணி நிர்வாகிகள் சுரேந்தர், சுகன், மிதில்ராஜ் மற்றும் விழா கமிட்டினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.......