ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் டோக்கன் முறைக்கு கடும் எதிர்ப்பு.

பூங்கா சாலையில் அதிமுக, பாஜக, TVK, NTK வினர் திரண்டதால் பரபரப்பு.ஆன்லைன் டோக்கன் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வரும் என அதிகாரிகள் கூறியதால் விழாக் குழுவினர் மகிழ்ச்சி.;

Update: 2026-01-20 12:37 GMT

நாமக்கல் மாவட்டம் சாலபாளையத்தில் வரும் 27 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கின்றார் அதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் ரூ.20 கட்டணம் செலுத்தி மாடுகளை பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஆன்லைன் டோக்கன் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் விழாக்குழுவினர் 100 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு ( 19.01.26) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 77 பேரை போலீசார் கைது செய்து நல்லிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்த நிலையில் மாலை 6 மணிக்கு போலீசார் அனைவரையும் வெளியே அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் ஆன்லைன் டோக்கன் முறை திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் பூங்கா சாலையில் சாலபாளையம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் விழாக்குழுவினருடன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், பாஜக மாவட்ட தலைவர் சரவணன், தமிழக வெற்றிக் கழக மாவட்ட துணைச் செயலாளர் தில்லை மோகன், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கியிருந்து நாமக்கல் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து கோட்டாச்சியர் சாந்தியிடம் மனு அளித்து பபேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வெளியே வந்த ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறுகையில் :- ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யக்கோரி கோட்டாச்சியரிடம் மனு அளித்துள்ளோம் ஆனால் அரசு அலுவலர்கள் இன்று மாலை தமிழகம் முழுவதும் 100 சதவிகிதம் ஆன்லைன் டோக்கன் முறை ரத்து செய்வதாக உறுதியாக தெரிவித்துள்ளனர் என கூறினர்.ஆன்லைன் டோக்கன் முறை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தால் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்

Similar News