ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த எம்பி ராஜேஷ்குமார்..

ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த எம்பி ராஜேஷ்குமார்..;

Update: 2026-01-20 14:46 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த‌ வடுகம் முனியப்பம்பாளையம் வன்னியர் தெரு குச்சிக்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று தினந்தோறும் ஸ்ரீ திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார். இந்த நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்பி மற்றும் நாமகிரிப்பேட்டை திமுக கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. ராமசாமி ஆகியோர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகி சி. சௌந்தர்ராஜன், ராஜேஷ்குமார் எம்பிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News