லாலாபேட்டை மேம்பாலத்தில் டெக்ஸ் பேருந்து மோதி மூன்று பேர் பலி
ஒரு வயது குழந்தையுடன் தாய், தந்தை உயிரிழந்த சம்பவம்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பரளியை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் விஜயகுமார் (30). இவர் நாமக்கல்லில் ஒரு ஹோட்டலில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இவர் இன்று இரவு புலியூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டியில் மனைவி சௌந்தர்யா வயது 25. ஒரு வயது பெண் குழந்தையான சன்மதியுடன் தனது ஸ்கூட்டரில் புலியூரை நோக்கி சென்ற போது லாலாபேட்டை மேம்பாலத்தில் கரூரிலிருந்து எதிரே வந்த டெக்ஸ்டைல் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு மூன்று உடல்களும் வாகன மூலம் கொண்டு சொல்லப்பட்டது