நாகையில் பொங்கல் பரிசு தொகைக்கு என்னாச்சு??? கேள்வி கேட்டவரின் செல்போன் கடை உடைத்து நாசம்
நாகை நியூஸ்;
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பின் வேட்டி சேலை குறித்து கேள்வி எழுப்பியவரின் கடையை சாக்கடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் கடையின் முகப்பு பகுதி படிக்கட்டினை நகர மன்ற உறுப்பினர் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது நாகை நகராட்சியின் 25 வது வார்டு சர் அகமது தெரு பகுதியை சேர்ந்தவர் நூருல் அமீன் இவர் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு வழங்கிய இலவச வேட்டி சேலை வார்டு மக்களுக்கு முறையாக வழங்காதது குறித்து அந்த வார்டு உறுப்பினர் ஜாகிர் உசேன் என்பவரிடம் கேள்வி எழுப்பி உள்ளார் இதன் காரணமாக நகர் மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேனிற்கும் நூருல் அமீனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள நூருல் அமீன் செல்போன் கடை வாசலை சாக்கடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில்மற்ற இடங்களை விட்டுவிட்டு அந்த ஒரு கடையின் வாசலில் இருந்த படிக்கட்டு கடையின் முகப்பு பகுதி ஆகியவற்றை ஜேசிபி எந்திரம் கொண்டு உடைத்து வாசலில் போட்டுள்ளார். இதுகுறித்து நூருல் அமீன் நகர் மன்ற உறுப்பினர் ஜாகீர் உசேனிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதனால் தனது உயிருக்கு நேரடி ஆபத்து ஏற்பட்டுள்ளது என நூருல் அமீன் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்