கரூரில் இளைஞர் வரலாற்று தேசபக்தித் திருவிழா-முன்னணி தேசிய வரலாற்று பேராசிரியர்கள் பங்கேற்பு.
கரூரில் இளைஞர் வரலாற்று தேசபக்தித் திருவிழா-முன்னணி தேசிய வரலாற்று பேராசிரியர்கள் பங்கேற்பு.;
கரூரில் இளைஞர் வரலாற்று தேசபக்தித் திருவிழா-முன்னணி தேசிய வரலாற்று பேராசிரியர்கள் பங்கேற்பு. பாரதிய வரலாற்று தொகுப்பு பேரவை தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில மையம் மற்றும் கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய மாநில இளைஞர் வரலாற்றுத் தேசபக்தித் திருவிழா வந்தே மாதரம் 150 என்ற மையக் கருத்தின் அடிப்படையில் கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவிலான முப்பெரும் இளைஞர் வரலாற்று தேசபக்தித் திருவிழாவிற்கு மூத்த வரலாற்று ஆய்வாளர் வீர. அரங்கராசனார் தலைமை வகித்தார். கரூர் வள்ளுவர் கல்லூரி தலைவர் ‘திருக்குறள் தூதர்’ செங்குட்டுவன், ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி செயலர் யதீஸ்வரி முகுந்தபிரியா அம்பா, சாரதா கல்வி குழுமம் செயலர் யதீஸ்வரி கஜானனபிரியா அம்பா முன்னிலை வகித்தனர். கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும் பாரதிய வரலாற்று தொகுப்பு பேரவை தமிழ்நாடு பாண்டிச்சேரி அமைப்பின் மாநில பொதுச் செயலாளருமான முனைவர் சொ. ராமசுப்பிரமணியன் மாநில அளவிலான முப்பெரும் இளைஞர் வரலாற்று தேசபக்தித் திருவிழாவின் நோக்க உரையில், “நமது தாய்நாடு, தாய்மொழியின் அறம் சார்ந்த அறிவுசார் பாரம்பரிய விழுமியங்கள் கருத்தரங்கம். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஓரணியில் ஒன்றிணைத்த வந்தேமாதரம் 150 இயக்க இளைஞர் வரலாற்று காங்கிரஸ் அறிமுகம். இந்திய முப்படை “பரம் வீர் சக்ரா’ உயர் விருது பெற்றவர்களின் ராணுவ வீர வரலாறை இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் விருதாளர்களின் புகைப்படங்களை கல்வி நிறுவனங்களுக்கு வழங்குதல் ஆகிய முப்பெரும் இளைஞர் வரலாற்று தேசபக்தித் திருவிழா நடைபெற்றுள்ளது என்று கூறினார். இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆய்வாளர்களான புது தில்லி பாரதிய இதிகாச சங்கலன யோஜனா அமைப்பின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் டாக்டர். பால முகுந்த் பாண்டே, தேசிய செயல் தலைவர் டாக்டர். கோட்ரேஷ், தேசிய துணைத் தலைவர் டாக்டர். ரஜநீஷ் சுக்லா, தேசிய செயலர் டாக்டர். ஷிவகுமார் மிஸரா ஆகியோர் அறம் சார்ந்த அறிவுசார் பாரம்பரிய விழுமியங்கள் குறித்து கருத்தரங்கச் சிறப்புரை ஆற்றினர். புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் அரசு செயலர் டாக்டர். ஓம் ஜீ உபாத்தியாயா கருத்துரை ஆற்றி கல்வி நிறுவனங்களுக்கு “பரம் வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் புகைப்படங்களை வழங்கினார். அமைப்பின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ஜி. கதிரவன் வந்தேமாதரம் 150 இயக்கம் குறித்து நடைபெறும் தமிழ்நாடு இளைஞர் வரலாற்று காங்கிரஸ் என்ற தலைப்பிலும், துணைத்தலைவர் குணசேகரன் “பரம் வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் ராணுவ வரலாறு குறித்தும் பேசினர். ‘வந்தே மாதரம் 150’ மாநில முப்பெரும் இளைஞர் வரலாற்று தேசபக்தித் திருவிழாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மானவியர், கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் இணைந்து வந்தே மாதரம் பாடல் ஆர்வமுடன் பாடினர். நிகழ்ச்சியின் நிறைவில் கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி முதல்வர் டாக்டர். கவிதா நன்றி கூறினார்.