டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் அமைப்பானது, சேலம் - பெரியார் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் தொடக்கம்.
"என் பாரதத்துக்கான இளைஞர்கள்" என்ற தலைப்பிலான 7 நாள் பயிற்சி முகாமின் துவக்க விழா நிகழ்ச்சியினை மோகனூர் ஊராட்சி ஒன்றியம் - ஆரியூர் கிராமத்தில் உள்ள சமூக நலக்கூட அரங்கில் நடத்தியது.;
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கே. எஸ். புருசோத்தமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று "நெகிழி இல்லா உலகம்" என்ற தலைப்பில் பேசினார். பிளாஸ்டிக் எனப்படும் நெகிழியால் சுற்றுப்புறச் சூழல் எப்படியெல்லாம் பாதிப்படைகிறது என்று விளக்கமாக எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் ஆரியூர் ஊராட்சி மன்றத்தின் மேனாள் தலைவர் ஏ.கே. ராஜாகண்ணன், நாமக்கல் மாவட்ட கல்வித் துறை ஆய்வாளர் கை. பெரியசாமி, ஆரியூர் ஊராட்சி செயலர் பி. சிவபாக்கியம், ஆரியூர் கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் கந்தசாமி, ஆரியூர் - செல்லப்பா மானியத் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கே. ஜெயந்தி, என் எஸ் எஸ் அலுவலர்கள் எம். சசிகலா, வீ. கோகிலா உட்பட கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு மாணவி ஏ.ஷாலினி தொகுத்து வழங்கினார்.