நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் தனது மகனின் திருமண அழைப்பிதழை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வழங்கினார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நாமக்கல் எம்பி தனது மகன் லெனின் மாதேஸ்வரன் திருமண அழைப்பிதழை வழங்கினார்.;
சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தனது மகனின் திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்.இந்நிகழ்வில் திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி, கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி,மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.சண்முகம், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சந்திரசேகர்,மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர்.மணி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் தம்பி வெங்கடாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.