குளித்தலையில் இரண்டு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து

மூன்று பேர் பலத்த காயம், போலீசார் விசாரணை;

Update: 2026-01-21 17:50 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (26). இவர் தனது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை பார்த்துவிட்டு தனது ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் குளித்தலை நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அதேபோல கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரி (22), ஜீவா (19) ஆகிய இருவரும் கண்டியூரில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் உண்டியல் நாணயங்களை பணமாக மாற்ற இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். மணத்தட்டை எல்லரசு பாலம் அருகே வந்தபோது 2 இருசக்கர மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News