நெல்லை மாநகர பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இன்று அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான பாப்புலர் முத்தையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள ஊழியர்களிடம் உணவின் தரத்தின் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.