புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் களப்பணி
இயற்கை விவசாயம், பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி;
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன் பட்டியில் விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு களப்பணி மாணவர்கள் கலந்து கொண்டனர். இயற்கை விவசாயம் மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினர். இதில் இயற்கை இலை கரைசல், பூஜ்ஜியம் ஆற்றல் குளிரூட்டும் அறை, பஞ்சகவியம், வாழையில் வேர்ப்புழு கட்டுப்பாடு, காளான் வளர்ப்பு பற்றிய செயல்முறை பயிற்சிகளும் நடைபெற்றது. மேலும் பருவ மாற்றத்தால் பயிர்களில் ஏற்படும் புதிய நோய்கள் குறித்தும் அதன் தடுப்பு இயற்கை பூச்சி கட்டுப்பாடு மற்றும் அதன் விற்பனை பற்றியும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு களப்பணி மாணவர்கள் ஜெகதீஷ், இஸ்மாயில், தபாயன், பன்வர், ஹரிகரன், ஹரி கிருஷ்ணன், சல்மான், இனியவன், ஜெகன், மனோஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.