திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நகர் குழு சார்பாக சவேரியார்பாளையம், பர்மா காலனி, வேடப்பட்டி, சாமியார் தோட்டம், குரு நகர், வினோபாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தகுதியான நபர்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்