கரூர்-வள்ளலாரின் வாழ்வியல் நெறிகளை சமூகத்திற்கு கொண்டு செல்ல மாணாக்கர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
கரூர்-வள்ளலாரின் வாழ்வியல் நெறிகளை சமூகத்திற்கு கொண்டு செல்ல மாணாக்கர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.;
கரூர்-வள்ளலாரின் வாழ்வியல் நெறிகளை சமூகத்திற்கு கொண்டு செல்ல மாணாக்கர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் திரு. அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் அனைத்து உலக வள்ளலார் மாநாடு நடைபெற உள்ளது. அவரது சமூகப் பணிகள் குறித்து மக்களிடையே எடுத்துச் செல்லும் விதமாக கட்டுரை போட்டி ஓவியப்போட்டி பேச்சுப்போட்டிகள் நடத்த இந்து சமய அறநிலையத்துறை 6- முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பள்ளி கல்வித்துறை மூலமும், கல்லூரி மாணவ- மாணவியர்களுக்கு கல்லூரி மூலமும் நடத்த திட்டமிட்டு இன்று அதற்கான போட்டிகள் கரூர் அரசு கலைக்கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கரூர் மாவட்ட உதவி ஆணையர் கணபதி முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெண்ணைமலை திருக்கோவில் செயல் அலுவலர் சுகுணா, சன்மார்க்க சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வள்ளலார் ஏற்படுத்திய கிளைச்சாலைகள், வள்ளலார் அருளிய மரணம் இல்லா பெருவாழ்வு, வள்ளலாரின் பேருபதேசம், சித்தி வளாக திருமாளிகையின் சிறப்புகள், வள்ளலாரின் பகுத்தறிவு பார்வை, வள்ளலாரின் சன்மார்க்கம் போன்ற தலைப்புகளில் பேச்சு போட்டிகளும், அருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்புகள், வள்ளலாரின் பேருபதேசம், சுத்தசன் மார்க்க நெறி, ஞான சபையின் எழுதிரை விளக்கங்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரை போட்டியும், ஒருமையுடன் தினது திருமலரடி, காயெலாம் கனியென, பாட்டு வித்தால் பாடுகின்றேன், புண்படா உடம்பும் புரைபடா மனமும் போன்ற தலைப்புகளில் இசையுடன் திரு அருட்பா பாடல்கள் பாடும் இசை போட்டியும், மகா தேவமாலை, காலையிலே என்றனக்கே, எத்தனையும் பேதமுறாது ஆகிய தலைப்புகளில் அருட்பாடல்கள் மனப்பாடம் செய்து ஒப்பளித்தல் போட்டியும், சத்திய ஞானசபை, சத்திய தருமச்சாலை, சித்தி வளாக திருமாளிகை, வள்ளலார் கருங்குழி இல்லம், வள்ளலார் மருதூர் இல்லம் போன்ற தலைப்புகளில் ஓவிய போட்டியும் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அனைத்து அனைத்து உலக வள்ளலார் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் பரிசுகள் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.