நாமக்கல் பிஎன்ஐ பிரம்மா சார்பில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மரியாதை!
10 முன்னாள் ராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.;
நாமக்கல்லில் பிஎன்ஐ பிரம்மா (பிஸினஸ் நெட்வொர்க் இந்தியா) சார்பில் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை கெளரவிக்கும் விழா நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கோல்டன் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.நிகழ்ச்சியில்,கர்னல் பழனியப்பன் (ஓய்வு) , மேஜர் ராமசாமி (ஓய்வு)ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். இதில், 10 முன்னாள் ராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.நாமக்கல் பிஎன்ஐ பிரம்மா தலைவர் இரா. ரகுபதி, துணை தலைவர் ரம்யா , பொருளாளர் கவின், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை திட்ட தலைவர் லோகநாயகன் குழுவினர் செய்து இருந்தனர்.