இலஞ்சி பிஎட் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலஞ்சி பிஎட் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி;

Update: 2026-01-23 06:13 GMT
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கலா வின்சிலா தலைமை வகித்தார் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், ஜெனிபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜெபா எபனேசர் வரவேற்றார் பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வாக்காளர்களின் கடமைகள், உரிமைகள் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பேசி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவ ஆசிரியர்களுக்கிடையே வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் உதவி பேராசிரியர்கள் ஐரீன் குளோரியா, ஜெசி டார்லிங், ராஜேஸ்வரி, அனிதா, உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன், நூலகர் முனைவர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக் ஜெயசந்திரன், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News