கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி
இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்துள்ள ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் அருகிலுள்ள கிராம கிராமங்களில் தங்கி கள பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகும்.;
கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி இராணிப்பேட்டடை ஜன.23- இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்துள்ள ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் அருகிலுள்ள கிராம கிராமங்களில் தங்கி கள பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகும் அந்த வகையில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் வைஷ்ணவி, சீ,வனிதா, த.விஜயலட்சுமி, கு,வினோதினி, து .வைஷ்ணவி செ,யோகப்பிரிதா, ரா .யுவசங்கரி, ஆகியோர் வாலாஜா அடுத்துள்ள திருப்பாற்கடலில் கடந்த சில வாரங்களாக தங்கி விவசாயிகளுடன் இணைந்து களப் பயிற்சியான நாட்டு நடுதல், களை பறித்தல், ஏர் உழுவுதல் போன்றவற்றில் ஈடுபட்டு பழகி வந்தனர் இந்த நிலையில் நேற்று இயற்கை விவசாயத்தை பொதுமக்களுக்கு விளக்கிடம் விதமாக அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் ஊர்வலமாக சென்று "மண்ணைகாத்து மனிதனை காப்போம்", " இயற்கை உணவு நோயற்ற வாழ்வு", "சுத்தமான மண் சுத்தமான உணவு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் பள்ளி தலைமை ஆசிரியர் வீரபத்திரன் கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்