கரூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு.

கரூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு.;

Update: 2026-01-23 09:55 GMT
கரூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2011 முதல் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வாக்காளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வெளிப்படையான நேர்மையான ஒரு அரசு அமைய வேண்டும் என்றால் ஒவ்வொரு வாக்காளரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்கள் ஆகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி மதம் இனம் ஜாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம் என அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Similar News