ஏ.பி.ஜெ அறக்கட்டளை சார்பாக வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை பயிற்சி வகுப்புகள்
ராணிப்பேட்டை மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் பொன்.கு.சரவணன் மற்றும் நகர வணிக சங்க செயலாளர் பாஸ்கரன் மேலும் ஷர்மிளா சரவணன் சிறப்பாக பணியாற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.;
ஏ.பி.ஜெ அறக்கட்டளை சார்பாக வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை பயிற்சி வகுப்புகள் இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜெ அறக்கட்டளை பசுமை திட்டத்தின் மூலமாக அரக்கோணம் டான் போஸ்கோ வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் கடந்த ஒரு வாரமாக இயற்கை சார்ந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு மற்றும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக ராணிப்பேட்டை மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் பொன்.கு.சரவணன் மற்றும் நகர வணிக சங்க செயலாளர் பாஸ்கரன் மேலும் ஷர்மிளா சரவணன் சிறப்பாக பணியாற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.