முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெட்ற இலவச கண் பரிசோதனை முகாம்
இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சியில்) இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கம் மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-01-23 12:16 GMT
இம்முகாமினை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார், துணை முதல்வர் முனைவர் ஆ.ஸ்டெல்லா பேபி, சமுதாய செயல்பாட்டுத் தலைவர் முனைவர் எம்.ராமமூர்த்தி, இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.ராதாகிருஷ்னன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.இம்முகாமானது வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்காக நடத்தப்பட்டது. சுமார் 108 பேர் இம்முகாமில் பங்குகொண்டு பயன்பெற்றனர். இதில் குறைந்த விலையிலான கண் கண்ணாடி 21 பேருக்கு வழங்கப்பட்டது. சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள 18 பேருக்கு பரிந்துரைக்கப்பட்டது