தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் விதிமுறைகளில் தளர்வுகள் - திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு தன்னார்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Dindigul;

Update: 2026-01-23 14:17 GMT
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகளில் தமிழக அரசு காளைகளுக்கு எவ்வித துன்பமும் நேராவண்ணமும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வண்ணமும், உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்திட ஏதுவாக, ஆன்லைன் பதிவு முறையினை மாற்றி, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும்,மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும். இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறை இரத்து செய்யப்படும் என சில தளர்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் அருண் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் வேங்கை ராஜா மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Similar News