திருச்செங்கோடு அருகே பருத்திப்பள்ளி அருகே உள்ள சோமனம்பட்டியில் கூரை வீடு எரிந்து சாம்பல்

திருச்செங்கோட்டை அடுத்த பருத்திப்பள்ளி அருகே உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல் அனைத்து பொருள்களும் கருவி நாசம்;

Update: 2026-01-23 16:05 GMT
திருச்செங்கோட்டை அடுத்த பருத்திப்பள்ளி அருகே உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்மாதேஸ்வரன்(44) S/o குப்புசாமி கூலி வேலை செய்து வரும் இவர்அது குடும்பத்தினருடன் மாலை நேரத்தில் தோட்டத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது. மாலை சுமார் 6.30 மணியளவில் மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியே வந்துள்ளது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாதேஸ்வரனுக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்து பார்ப்பதற்குள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துவிட்டன. தீ விபத்து குறித்து திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினருக்குதகவல் கிடைத்தது அனைத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயிணை அணைத்தனர். கூரை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News