திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவிலின் உப கோயில்களானகைலாசநாதர் கோவில் ஆறுமுகசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தைப்பூச திருவிழா தேரோட்டம் திருச்செங்கோட்டில் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடக்கஉள்ள நிலையில் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி அருள்மிகு ஆறுமுகசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது;

Update: 2026-01-24 13:01 GMT
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் தைப்பூச திருவிழா தேரோட்டம் திருச்செங்கோட்டில் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதிஉள்ள நிலையில் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி அருள்மிகு ஆறுமுகசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா என்று கொடியேற்றத்துடன் துவங்கியது கைலாசநாதர் ஆலயத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி மாவிலை, கூர்ச்சரம் தர்ப்பை பூமாலை ஆகியவற்றைக்கொண்டு கட்டி நந்திக் கொடியை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர் கொடியேற்று விழா நிகழ்ச்சியில்திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திருவிழா கமிட்டி தலைவர் முத்து கணபதிநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று கொடியேற்றத்தைதொடர்ந்து பல்வேறு மண்டபக் கட்டளைகள் நடக்க உள்ளது வரும் 31ஆம் தேதி மாலை சுகந்த குந்லாம்பிகை உடனமர் கைலாசநாதர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் தொடர்ந்து அருள்மிகுஆறுமுகசாமி வள்ளி தேவசேனை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்க உள்ளது இதற்கு அடுத்த நாள் பிப்ரவரி ஒன்றாம் தேதிகாலை 10 மணிக்கு ஆறுமுகசாமி வள்ளி தேவசேனை உடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்க உள்ளதுமாலை நாலு மணிக்கு மேல் சோமாஸ்கந்தர் சுகந்த குந்லாம்பிகை கைலாசநாதர் சண்டிகேஸ்வரர் சூல தேவர்உடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சிநடக்க உள்ளது.

Similar News