உலகில் சரித்திரத்தை படைத்தவர்கள் எல்லாம் சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான் -தமிழக நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் கரூரில் விளக்கம்.
உலகில் சரித்திரத்தை படைத்தவர்கள் எல்லாம் சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான் -தமிழக நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் கரூரில் விளக்கம்.;
உலகில் சரித்திரத்தை படைத்தவர்கள் எல்லாம் சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான் -தமிழக நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் கரூரில் விளக்கம். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களது சமுதாயத்தின் வலிமையை வெளிக்காட்டி அதன் மூலம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னணி அரசியல் கட்சிகளிடம் சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக முழுவதும் பல்வேறு சமுதாயத்தினர் நடத்தி வருகின்றனர். இன்று கரூர் அடுத்த தென்னிலை பகுதியில் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர்சமுதாய முன்னேற்ற சங்க இளைஞரணி தலைமை அலுவலகம் திறப்பு விழா சங்கத்தின் இளைஞரணி மாநில தலைவர் மதி கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில துணை தலைவர் தென்னரசு, மாநில பொதுச் செயலாளர் கனகராஜ், மாநில பொருளாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப்பாளராக பங்கேற்ற தமிழக நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாளவந்தியார் சரவணன் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த கலசத்திற்கு தீபாதாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு உரையாற்றிய சரவணன் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அரசியலில் நமது கட்சியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது என்றால் அதற்கு கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்க இளைஞர் அணி தலைவர் மதி கவுண்டர் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், பொதுவாக உள்ளூர் மாடு விலை போகாது என தெரிவிப்பார்கள். ஆனால், உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய சிந்தனையாளர்கள் எல்லாம் சாதாரண குக்கிராமத்தில் தான் தோன்றி இருக்கிறார்கள். சரித்திரத்தை படைத்தவர்கள் எல்லாம் கிராமத்தில் இருந்து தான் வந்துள்ளார்கள் அப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.