மொழிப்போர் தியாகியின் வாரிசுக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கிய மாநில தி.மு.க. அமைப்பு செயலர் பாரதி
குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணிற்கு மலரஞ்சலி செலுத்தி, தியாகியின் வாரிசுக்கு மாநில தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினார்;
குமாரபாளையத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஏராளமான பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், பதினைந்து பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த மொழிப்போருக்காக உயிர் நீத்தவர்கள் நினைவாக குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகி நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது இங்கு ஜன. 25ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்துணர்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க.வின் மாநில அமைப்புச் செயலாளர் பாரதி பங்கேற்று, நினைவுத்தூணிற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியின் போது மொழிப்போர் தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டடது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முருகேசன் என்பவர் மனைவி சுலோசனாவிற்கு சால்வை அணிவித்து கௌரவித்ததுடன், அவருக்கு உதவித்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் முதல்வர் ஸ்டாலின் உத்திரவின் பேரில், தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது அப்பொழுது சுலோசனா துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த காட்சியினை கண்ணீருடன் கூறியது அனைவரையும் மனமுருக செய்தது.