வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சார்பில் "மாரத்தான்" போட்டி : ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்பு...
வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சார்பில் "மாரத்தான்" போட்டி : ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்பு...;
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இயங்கி வரும் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சார்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை போக்குவரத்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டது. ராசிபுரம் ஆத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள, கொங்கு திருமண மண்டபத்தில் தொடங்கி, ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் நிறைவடையும் வகையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கான இம் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டும் விழா வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் தலைவர் முனைவர் திரு.S.குணசேகரன் அவர்கள் கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்தார். வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் செயலாளர் முனைவர் G.வெற்றிச்செல்வன் அவர்களும், வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் முனைவர் திருமதி ரோஷினி வெற்றிச்செல்வன் அவர்களும் முன்னிலை வகித்தனர். இந்த மாரத்தான் போட்டியில் மாணவிகள் பிரிவில் மாணவி B. லோஸ்னா 21 நிமிடம் 28 நொடிகளில் இலக்கை அடைந்து முதல் பரிசினை வென்றார். S.கலைவாணி இரண்டாம் பரிசினையும், K.அகல்மதி மூன்றாம் பரிசினையும் வென்றனர். மாணவர் பிரிவில் T. சௌந்தர் என்ற மாணவர் 16 நிமிடம் 47 நொடிகளில் இலக்கை அடைந்து முதல் பரிசினை வென்றார். வெற்றிவிகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர் N.மோகன் பரிசினையும் R அன்பீசன் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். இரண்டாம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு, பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. நான்கு முதல் 10 வரையிலான இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் போட்டியில் பங்கேற்றதற்கான பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய பின், பள்ளியின் தலைவர் முனைவர் திரு S.குணசேகரன் அவர்கள் தனது பாராட்டு உரையில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியும், உடல் நலனும் இரண்டு கண்கள் போன்றவை. தினசரி சாலைகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை இளம் வயதிலேயே மாணவ சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதற்காக இவ் வகையான மாரத்தான் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி நடத்தி வருகிறது. இது பள்ளி நடத்தும் ஆறாவது மாரத்தான் போட்டியாகும் இவ்வகையான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர் சமுதாயத்திற்கிடையே ஒற்றுமை மனப்பான்மை ஓங்கும், போக்குவரத்து சார்ந்த விழிப்புணர்வு பரவும் என்றார். மாணவ சமுதாயத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இவ்வகை மாரத்தான் போட்டிகளை வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி நடத்திவருவதை பெருமையுடன் குறிப்பிட்டார். இப் போட்டிகளில் மாணவ, மாணவிகளை பங்கேற்க செய்த பெற்றோர்களுக்கும், போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறையினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் இப் போட்டி களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த பள்ளி முதல்வர். ஒருங்கிணைப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் ராசிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.நடராஜன் அவர்களும், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மனோகரன், திரு.ஈஸ்வரன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கும் நிர்வாகத்திற்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மாரத்தான் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்ததை பெருமிதத்துடன் நினைவு கொள்ளும் வகையில் செல்பி பாயிண்ட் ஏற்படுத்தப்பட்டிருந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சான்றிதழ்கள், பரிசுகள், பாராட்டு பதக்கங்களுடன் அவர்தம் பெற்றோர்களுடன் செல்பி ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இத்தகைய மிகச்சிறந்த ஒரு மாரத்தான் போட்டியை நடத்திய வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மனதார பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி.சுதாரமேஷ் ஒருங்கிணைப்பாளர்களும் ,உடற்கல்வி அவர்கள் தலைமையில் ஆசிரியர்களும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.