ராசிபுரத்தில் பழமையான இருசக்கர வாகனங்களின் பேரணி..
ராசிபுரத்தில் பழமையான இருசக்கர வாகனங்களின் பேரணி..;
ராசிபுரம் பகுதியில் பழமையான இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோரின் வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராசி ரைடரஸ் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணி முன்னதாக ஆண்டகளூர்கேட் பகுதியில் தொடங்கியது. பழமையான வாகனங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவும் இப்பேரணி நடத்தப்பட்டது. ஆண்டகளூர்கேட் பகுதியில் தொடங்கிய இப்பேரணி நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஏடிசி டெப்போ, முத்துக்காளிப்பட்டி, சேலம் சாலை, ராசிபுரம் பேருந்து நிலையம் வழியாக 20 கி.மீ. தொலைவு நடத்தப்பட்டது. இதில் 1969 முதல் 1995 வரை பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்கூட்டர்களான பஜாஜ் செடாக், பஜாஜ் சூப்பர், வெஸ்பா, எம்-80, பஜாக் கேபி-100, ஹெமாகா ஆர்எக்ஸ்-100, ராயல் என்பீல்டு, இன்ட்-சுசூகி, ஜாவா, ஹெச்டி போன்ற 50 ஆண்டுகளுக்கு முந்தைய இரு சக்கரங்கள் பராமரித்து பயன்படுத்தி வருவோர் இதில் பங்கேற்றனர். இதில் ராசிபுரம், நாமக்கல்,சேலம், பெங்களூர் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த 65-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஒட்டிகள் பங்கேற்றனர்.