திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு நேரடியாகசெல்லும் வகையில் புதியபேருந்து வழித்தடத்தை திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்

திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு நேரடியாகசெல்லும் வகையில் புதியபேருந்து வழித்தடத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் மற்றும் முன்னாள் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்;

Update: 2026-01-25 15:36 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து பழனிக்குச் செல்லும் முருக பக்தர்கள்ஈரோடு சென்று அங்கிருந்துதான் பழனிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது இதனால் திருச்செங்கோட்டில் இருந்து பழனிக்கு நேரடியாக பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. இதனை கருத்தில் கொண்டுமுருக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் சட்டமன்றத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து திருச்செங்கோட்டில் இருந்து காங்கேயம் தாராபுரம் வழியாக பழனிக்கு நேரடி பேருந்து இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் காலை 5:30 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து நேரடியாக பழனிக்குச் சென்று திரும்பும் வகையில் வழித்தடம் அமைக்கப் பட்டுள்ளது. திருச்செங்கோடு கொக்கராயன் பேட்டை காங்கேயம் தாராபுரம் வழியாக பழனியை அடையும் இந்த பேருந்து வழித்தடத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பரமத்தி சட்டமன்ற உறுப்பினரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடுமேற்கு நகர திமுக செயலாளர்முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுகிழக்கு நகர திமுக செயலாளர்நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் மற்றும்நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் போக்குவரத்து துறைஅதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News