குளித்தலையில் நீலமேகப் பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா
சுவாமி புறப்பாடு பக்தர்கள் தரிசனம்;
கரூர் மாவட்டம் குளித்தலை டவுன்ஹால் தெருவில் அமைந்துள்ள பூமி நீளா கமலநாயகி சமேத நீலமேகப் பெருமாள் கோவிலில் நேற்று ஜனவரி 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரதசப்தமி முன்னிட்டு ஒரே நாளில் எம்பெருமாள் சப்த வாகனங்களில் புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கி ஒவ்வொரு மணி நேரத்திற்கு சுவாமி புறப்பாடு, சூரிய பிரபை, ஹம்ஸ வாகனம், அனுமந்த வாகனம், கருட சேவை, சிம்ம வாகனம், இரவு சந்திர பிரபை வாகனத்துடன் புறப்பாடு நடைபெற்றது. குறிப்பாக கருட வாகனம் புறப்பாடு மட்டும் 8 வீதிகளில் நடைபெறும். மற்ற வாகனங்கள் 4 தேரோடும் வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தரிசனம் செய்து சென்றனர். நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் இளையராஜா, ஆய்வாளர் மாணிக்க சுந்தரம், செயலாளர் சித்ரா, நீலமேக கண்ணன் பட்டாச்சாரியார் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.