பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது

Dindigul;

Update: 2026-01-26 02:23 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடிமண்டபத்தில் காலை 9.50 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடிக்கம்பத்திற்கும் கொடிக்கும் பூஜை முடிந்து கொடியேற்றம் நடைபெற்று தைப்பூசத் திருவிழா துவங்குகிறது முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வான, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ல் அதிகாலை 5 மணிக்கு தோலுக்கினியானில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்வும் மாலை 5 மணிக்கு தைப்பூச திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 4-ல் மாலை தெப்பத்தேர் திருவிழா அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது

Similar News