இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி , தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 113 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி , தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 113 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 113 பயனாளிகளுக்கு ரூ.1,87,00,704 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா,, மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை, தேசிய கொடி நிறத்திலான வண்ண பலுன்களையும் பறக்கவிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த மாவட்ட ஆட்சித்தலைவர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 21 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 53 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், சிறப்பாக பணிபுரிந்த 362 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணானிளி வழங்கினார். இந்நிகழ்வில், காவல்துறை அணிவகுப்பில் படையின் தளபதியாக ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஷ் தலைமையேற்று அணிவகுப்பை வழிநடத்தினார். முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் வரதராஜன் இரண்டாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு.சீமான் அவர்களும், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம் அவர்களும், மேலும் ஊர்க்காவல் படை முதலாம் படைப்பிரிவிற்கு உதவி படைப்பிரிவு தளபதி யு.ஆல்பர்ட் தலைமையேற்று வழி நடத்தினார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.23.59 லட்சம் மதிப்பிலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.75,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 05 பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 03 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.27 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.3.17 லட்சம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பிலும், தாட்கோ சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.30..15 லட்சம் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.6.00 லட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.58.34 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 05 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.50.40 லட்சம் மதிப்பிலும், தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் 18 நபர்களுக்கு ரூ.60,000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் விபத்து மரணம் உதவித்தொகை 01 பயனாளிக்கு ரூ.2.05 லட்சம் மதிப்பிலும், சமூகநலத்துறையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.6.00 லட்சம் மதிப்பிலும் என பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 113 பயனிகளுக்கு ரூ.1,87,00,704 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பின்னர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை, குரும்பாலூர், வேப்பூர் ஆகிய அரசு கலை மற்றும் அறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 522 மாணவ மாணவிகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சு.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சொர்ணராஜ், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) பாலமுருகன் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.