ஏமூர் புதூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
ஏமூர் புதூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.;
ஏமூர் புதூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கரூர் தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏமூர் ஊராட்சியில் உள்ள ஏமூர்புதூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் வீரபத்திரன்,ஏமூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சிக் கருதி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் வாக்காளர் உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.