நெல்லை மாநகர தச்சநல்லூர் கரையிருப்பு RSA நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெள்ளகோவில் சுடலைமாட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கொடை விழா இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமை குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.