கரூரில்,உலக அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்ற மாணவிகள் குழு நடனம் ஆடி அசத்தல்.
கரூரில்,உலக அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்ற மாணவிகள் குழு நடனம் ஆடி அசத்தல்.;
கரூரில்,உலக அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்ற மாணவிகள் குழு நடனம் ஆடி அசத்தல். இந்திய ஏரோபிக்ஸ் சம்மேளனம் (ISAFF) சார்பில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் மாநில ஏரோபிக்ஸ் பயிற்சி முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது. உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற புதிய செயல் திட்டம் வடிவமைத்து அகில இந்திய ஸ்போர்ட்ஸ், பிட்னஸ் ஏரோபிக்ஸ் சம்மேளனம் (ISAFF) கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் மாநில ஏரோபிக்ஸ் பயிற்சி முகாம் 8 தொழில்நுட்ப அமர்வுகளாக நடைபெற்றது. ஏரோபிக்ஸ் சம்மேளனத்தின் (ISAFF) தேசிய செயல் தலைவர் சந்தோஷ் கைர்நார் தலைமையில் இந்திய ஏரோபிக்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரோகிணி காட்கில் இப்பயிற்சியை வழங்கினார். பரணி கல்விக் குழும முதன்மை முதல்வரும் தேசிய விளையாட்டு ஆலோசகருமான முனைவர் ராமசுப்பிரமணியன் இந்த பயிற்சி குறித்து தெரிவிக்கும் போது, முழு உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனுள்ள ஏரோபிக்ஸ் கலை தற்போது ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் என்ற விளையாட்டாக சி.பி.எஸ்.இ (CBSE Nationals) தேசிய விளையாட்டு போட்டிகளிலும், எஸ்.ஜி.எப்.ஐ (SGFI Nationals) தேசிய விளையாட்டிலும், உலக போட்டிகளிலும் இடம் பெற்றுள்ளது. நியுசிலாந்தில் இவ்வருட முடிவில் உலக ஏரோபிக்ஸ் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தேசிய, உலக அளவிலான பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஏரோபிக்ஸ் சம்மேளனத்தின் (ISAFF) தலைசிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இப்பயிற்சியை வழங்கி உள்ளோம். உலக அளவிலான போட்டிகளில் நமது கரூர் மாணவர்கள் வெல்லும் வரை இது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து நடத்த உள்ளோம் எனவும், ஏரோபிக்ஸ் விளையாட்டுத் திறன்கள், அனைத்து அம்சங்கள், கலைநயமிக்க நகர்வுகள் (Artistic Moves), பல்வேறு உருமாற்றங்கள் (Different Transformations) உள்ளிட்டவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட இப்பயிலரங்கில் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள், பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றறு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் என்றார். பயிற்சி நிறைவு பெற்றதை முன்னிட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் குழு நடனம் ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். இந்த விழாவில் கரூர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், ஏரோபிக்ஸ் சங்க மாநில செயலர் லதா, மாநில இணைச் செயலாளர் சிவகாமி, பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.