சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை மாணாக்கர்கள் தடுக்க முடியும். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணாக்கர்களுக்கு வேண்டுகோள்.
சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை மாணாக்கர்கள் தடுக்க முடியும். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணாக்கர்களுக்கு வேண்டுகோள்.;
சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை மாணாக்கர்கள் தடுக்க முடியும். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணாக்கர்களுக்கு வேண்டுகோள். தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை அண்மைக்கால ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது. விபத்துகளை தடுக்கவும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆண்டுதோறும் தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக இன்று கரூர் திருவள்ளூர் மைதானத்தில் கரூரில் செயல்படும் இளம் தொழில் முனைவோர் அமைப்பான Young Indian அமைப்பு சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகள் விபத்துக்கள் ஏற்படாத வண்ணமும், அதை தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பை மேற்கொள்வது குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கரூர் திருவள்ளுவர் திடலில் துவங்கி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு மீண்டும் திருவள்ளுவர் மைதானத்தை அடைந்தது. இந்த பேரணியைத் தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி் மாணாக்கர்கள் இடையே பேசுகையில், அடுத்த ஆண்டுக்குள் கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பெருமளவு இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களால் முடியும் என்றும் ஒவ்வொரு மாணவரும் தங்கள் வீட்டில் உள்ள பெற்றோர் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் விபத்துக்களை குறைக்கலாம். அதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என மாணாக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தொழில் கூட்டமைப்பின் தலைவர் பாலசுப்ரமணி யங் இந்தியா அமைப்பின் நிர்வாகி கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.