குளித்தலை தென்கரை வாய்க்கால் நடைபாலத்தில் சிக்கிய கார்
குளித்தலையில் பரபரப்பு;
கரூர் மாவட்டம் குளித்தலை தேசிய நெடுஞ்சாலைக்கும் குளித்தலை நகரப் பகுதி பழைய நெடுஞ்சாலை இடையே தென்கரை பாசன வாய்க்கால் செல்கிறது. இதன் குறுக்கே சிறிய நடைபாலம் ஒன்று உள்ளது. இவ்வழியே திருச்சி போல்கேட் பகுதியிலிருந்து மணப்பாறை செல்வதற்காக காரை ஓட்டி வந்த திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகரப்பகுதி வழியாக செல்ல தவறுதலாக பாதை மாறி நடைபாலத்தில் ஏறி உள்ளார். அப்போது நடைபாலத்தில் ஏறிய காரின் இடது பக்கவாட்டில் உள்ள இரண்டு சக்கரங்கள் பாலத்தின் விளிம்பில் இறங்கி சிக்கிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காரை விட்டு வெளியேறினார். பிறகு கிரேன் வரவழைக்கப்பட்டு கார் நடைபாத்தில் இருந்து மீட்கப்பட்டு கார் கொண்டு செல்லப்பட்டது. கடந்த 5 மாதங்கள் முன்பு தஞ்சாவூரை சேர்ந்த கார் ஓட்டுநர் கூகுள் மேப் உதவியுடன் ஒட்டி வந்து இதே நடைபாலத்தில் கார் சிக்கி கொண்டு வெகு நேரம் கழித்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.