படைவெட்டிஅம்மன் தீர்த்த குட ஊர்வலம்
No.,3. குமாரபாளையம் படைவெட்டிஅம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்.;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மல்லூர் No.3 குமாரபாளையத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் வீடு, ஸ்ரீ படைவெட்டியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதனையொட்டி துந்துபிகள் முழங்க, தாரை தப்பட்டைகள் ஒலிக்க, பறை இசைக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, காளை மாடுகள், பலவித வாணவேடிக்கைகள்,பம்பையுடன் மல்லூர் சுனைக்கரடு ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பெருந்திரளாக தீர்த்துக்குட ஊர்வலம் நடைபெற்றது. தீர்த்த குட ஊர்வலத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி, ஸ்ரீ முருகர், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ மகாராஜா, ஸ்ரீ படைவெட்டி அம்மன் பஞ்சலோக விக்கிரகங்கள் மல்லூர் சுனைக்கரட்டில் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, பக்க மேள வாத்தியங்கள் நாதஸ்வரங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஊர் பொதுமக்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோயிலில் வைக்கப்பட்டது.ஸ்ரீ படைவெட்டியம்மன் விக்கிரகம் ஸ்ரீ படைவெட்டியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஸ்ரீ கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை, முதல்கால பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்